மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தரங்கம்பாடியில் உள்ள ஓட்டங்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழாவை தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.