மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.