தோல்வி பயத்தால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவதாக பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார்.
மேங்கு வங்கம் மாநிலம் துர்காபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட அஞ்சுவதாக தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டதாக கூறினார். இளவரசர் ராகுல்காந்தி வயநாட்டில் தோல்வி அடைவார் என ஏற்கனவே கூறியிருந்ததாகவும், அதனை உறுதிப்படுத்தும்விதமாக அவர் அமேதியை தவிர்த்து ரேபரேலி தொகுதியிலும் களம் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தலித் சிறுமிகளை சீரழித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடே வலியுறுத்திய போதும், திரிணாமுல் காங்கிரஸ் அவர்களை பாதுகாத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மனித நேயத்தை விட வாக்கு வங்கி தான் திரிணாமுல் கங்கிரசுக்கு முக்கியமா என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.