பழுதடைந்த அரசுப்பேருந்துகளுக்கு இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தினசரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் வார இறுதியில் கூடுதலாக இயக்கப்படுவதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது
இதையடுத்து ஊடகங்கள் மூலம் பழுதடைந்த பேருந்துகள் அரசின் கவனத்திற்கு வந்ததாகவும் இதனை தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடத்தி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்னர் பேருந்துகள் பழுதுபார்க்காமல் இருந்ததாகவும், 2022-ம் ஆண்டுக்கு பின்னர் சேதமடைந்த பேருந்துகள் 55 விழுக்காடாக இருந்ததாகவும் இதனால் வருமானம் இன்றி புதிய பேருந்துகள் வாங்க முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் 7 ஆயிரத்து 682 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டதாக அந்த அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
மக்களின் வசதிக்காக ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டு முதற்கட்டமாக 500 பேருந்துகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 முதல் இந்தாண்டு வரை ஆயிரத்து 500 பேருந்துகளுக்கு மேற் கூண்டு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 839 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டுகளை விட தற்போது உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.