மயிலாடுதுறை மாவட்டம், ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஆறு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதற்காக, 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நவக்கிர ஹோமம் நடைபெற்றது. 108 வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளம், தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
சுவாமி, அம்பாள், கருவறை கோபுரங்கள், ராஜகோபுரங்கள், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.