தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பொறியாளரின் வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிசேரி கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி, அபுதாபியில் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி சுந்தரி, தனது இரண்டு குழந்தைகளுடன் இங்கேயே வசித்து வருகிறார்.
இந்தநிலையில், வீட்டின் பின்பக்க மரக்கதவை உடைத்து, லாக்கரில் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளைடியத்துள்ளனர்.
புகாரின் பேரில் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.