சிவகங்கையில், எலுமிச்சைப்பழம் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேவணிபட்டியில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஏக்கருக்கு மேல் நாட்டு எலுமிச்சைப்பழ ரங்களை பயிரிட்டுள்ளனர்.
மார்ச் மாதத்திற்கு முன்பு கிலோ 50 ரூபாய் வரை எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால், தேவை அதிகரித்துள்ளது.
இதனால், ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் நூறு ரூபாய்க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.