கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சென்னை பெரம்பூரிலிருந்து, நீலகிரி மாவட்டம் உதகைக்கு 30க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். உதகையிலிருந்து திரும்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது உடலை கூராய்விற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.