தேனி அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு காவடி சுமந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.