தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்கவும் கடல்சார் தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது.