உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரி மற்றும் சிசுவின் உடல் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுரேஷ் தனது மனைவி கஸ்தூரியை, சொந்த ஊரில் வளைகாப்பு செய்ய, சென்னையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் சென்றனர். ரயிலானது பு.மாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வாந்தி எடுக்க சென்ற கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.
அபாய சங்கிலி இழத்தும் முறையாக வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண்ணை காப்பற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் உடற்கூராய்வுக்குப் பின்னர் சென்னை கொண்டுவரப்பட்ட கஸ்தூரி மற்றும் சிசுவின் உடல் திரிசூலம் சுடுகாட்டில் ஒன்றாக வைத்து தகனம் செய்யப்பட்டது.