கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆறு மாசு அடைந்து வருவதால், பொது மக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.
ஆனால், இது பற்றி சற்றும் கவலைப்படாத இளைஞர்கள், திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்ட தடுப்பனை மற்றும் பவானி ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். மேலும், பெண்கள் சிலர் துணிகளை துவைத்து வருகின்றனர். தண்ணீர் மேலும் மாசு அடைந்து வருவதால், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.