டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.,வில் இணைந்தார்.
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அர்விந்தர் சிங் லவ்லி தாம் வகித்து வந்த டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தமது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைத்த அவர், அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதை சுட்டிகாட்டி இருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் அர்விந்தர் சிங் லவ்லி, பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ் குமார் சவுகான், நசீப் சிங், நீரஜ் பசோயா மற்றும் இளைஞர் காங்., முன்னாள் தலைவர் அமித் மாலிக் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.