இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
2024-25-ம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடைபெற்றது.
நாடு முழுவதும் 557 நகரங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.
இத்தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.