இசை பெரியதா? பாடல் பெரியதா? என இணையத்தில் பெரும் சர்ச்சை எழும்பிய நிலையில், மக்கள் தமக்காக பேசத் தொடங்கிவிட்டதால், கவிஞன் தமது குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என தமக்குரிய பாணியில் கவிதையாக தனது எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில், படிக்காத பக்கங்கள் என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள், இளையராஜாவையும், வைரமுத்துவையும் இணையத்தில் வசைபாடி வருகின்றனர்.
குறிப்பாக இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், தன்னுடைய பங்கிற்கு வைரமுத்துவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.
“குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” என தனக்குரிய பாணியில் பதிவிட்டுள்ளார்.
இதனால், இளையராஜா – வைரமுத்து விவகாரம் மீண்டும் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.