சென்னையில் கஞ்சா இளைஞர்களை போலீசாரிடம் காண்பித்து கொடுத்த ஆத்திரத்தில் திமுக பெண் நிர்வாகியை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை நாவலர் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சரஸ்வதி, திமுக 38 வட்ட துணை செயலாளராக உள்ளார்.
தனது வீட்டை சுற்றி இளைஞர்கள் சிலர் கஞ்சா புகைப்பதாக ஆர்கே நகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை ஆத்திரமடைந்த கஞ்சா போதை இளைஞர்கள், சரஸ்வதியை வீடு புகுந்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.