மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு ஆதரவாக அவரது மகன் மகாநாரியமன் சிந்தியா சமையல் செய்து வாக்கு சேகரித்தார்.
ஷேக்பூர் கிராமத்தில் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஜோதிராதித்ய சிந்தியா குணா தொகுதி எம்பியாக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.