பாக்ஜலசந்தி கடலை 10 மணி 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் சிலர் ராமேஸ்வரம் அடுத்த சங்குமால் கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கை தலைமன்னாருக்கு சென்றனர்.
அங்கிருந்து, எட்டு சிறுவர்கள், நான்கு சிறுமிகள் உட்பட மொத்தம் 12 பேர் கடலில், நீச்சல் ரிலே போட்டிக்காக நீந்த தொடங்கினர். அவர்கள் அனைவரும் தொடர்ந்து முப்பது மணி நேரம் நீந்தி சாதனை படைத்து, தனுஷ்கோடிக்கு திரும்பினர். சாதனை படைத்த நீச்சல் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பொது மக்கள் மாலை அணிவித்து உற்சாகப்படுத்தினர்.