தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே எலும்பு முறிவு வைத்தியரை கொலை செய்து அவரது உடலை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன ஒவுலாபுரத்தைச் சேர்ந்த சந்திர வேல்முருகன், கடந்த 2ஆம் தேதி கூடலூரில் உள்ள எலும்பு முறிவு வைத்தியசாலைக்கு சென்றவர், வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, நிஷாந்த் மற்றும் அவரது தந்தை கவிசீலன் ஆகியோர் முன்பகை காரணமாக சந்திர வேல்முருகனை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.