சிவகங்கை மாவட்டம், சாத்தனூர் பகுதியில் உடல்நலம் குறைவால் உயிரிழந்தவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனியம்மாள் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்தோனியம்மாளின் கண்களை தானமாக வழங்குவதாக அவரின் மகன் சரவணன் தெரிவித்தார்.
இவரின் இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.