உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்ட ரோட்ஷோ நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி பிரமாண்ட ரோட் ஷோ நடத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரேட் ஷோ நடைபெற்றது.
அலங்கரிப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, தாமரை சின்னத்தை காட்டி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சாலை இருமருகிலும் நின்ற பொது மக்களும், கட்சி தொண்டர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோட் ஷோவால் அயோத்தி மாநகரமே களைகட்டியது.