நீலகிரியில் சுற்றுலா வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதால் ஓட்டுநர்களுக்கு மேட்டுப்பாளையம் காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தால் சுற்றுலா பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் சுற்றுலா வாகனங்கள், மலைப்பாதையில் விபத்தில் சிக்குகின்றன.
எனவே ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீலகிரி நோக்கி செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் அறிவுரைகளை வழங்கினார்.
இயற்கை நலனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் தடை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.