ராமநாதபுரம் அருகே வந்த அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்ததில், பேருந்தின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்து ராமநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, லாந்தை என்னுமிடத்தில் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்ததார். முன் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்கள் மயக்கமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் – ராமேஸ்வரம் இடையே தினசரி இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்று இன்று காலை ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது.
அந்த அரசு பேருந்தை தினகரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். பேருந்து மதியம் சுமார் 4 மணி அளவில் ராமநாதபுரம் அடுத்த லாந்தை பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென முகப்பு கண்ணாடி உடைந்தநிலையில் ஓட்டுநர் தினகரனுக்கு முகத்தில் கண்ணாடி துண்டுகள் குத்தி படுகாயம் அடைந்தார்.
இருப்பினும் ஓட்டுநர் தினகரன் சுதாரித்துக் கொண்டு பேருந்தை பாதுகாப்பாக சாலை ஓரம் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பேருந்து ஓடி கொண்டிருந்த போது முகப்பு கண்ணாடி உடைந்து கண்ணாடி துண்டுகள் பேருந்துக்குள் விழுந்தத்தால் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ஓட்டுனர், மற்றும் பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கண்ணாடி உடைந்த பேருந்தை ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு போக்குவரத்து ஊழி்யர்கள் எடுத்துச் சென்றனர்.