இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.
ஆனால், அவர் பயணிக்க இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்தப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனை சுனிதா வில்லியம்ஸிடமிருந்து கைநழுவியுள்ளது.
ஆக்ஸிஜன் செல்லும் வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.