கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 15ஆம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தொடர்பான வாதங்களை மே 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதனிடையே ஜாமீன் கோரி சிசோடியா தாக்கல் செய்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.