நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறையை ஒட்டி உதகைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஒட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கல்லார் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன.
நீலகிரி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைச் சாவடியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இ-பாஸ் இல்லாத சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவதற்கென ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.