நாய் உள்ளிட்ட செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இனி வரும் காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும் என தெரிவக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு அழைத்து வரப்படும் ஒவ்வொரு செல்லப்பிராணிகளுக்கும் வாய் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், தெருநாய்கள், கட்டவிழ்க்கப்பட்ட நாய்களுக்கு பூங்காவிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
விலங்குகளை வளர்ப்பவர்கள் தேவையான உணவு, இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளை வெளியில் அழைத்து வரும் போது உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.