5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி சாட்டை துரை முருகன் வெளியிட்டிருந்த வீடியோவில், தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி, ராமநாதபுரம் கோபாலபட்டினம் பகுதி ஜமாத்துக்கு, 10 லட்சம் வழங்கியதாக பேசியிருந்தார்.
இந்நிலையில், சாட்டை துரை முருகன் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், தன் நற்பெயருக்கும், கூட்டணி கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது எனவும் எம்பி நவாஸ் கனி குற்றச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, பதில் அளிக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என எம்பி நவாஸ் கனி எச்சரித்துள்ளார்.