திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளியை வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஆண்டார், தமது மகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டின் முன்புறம் தூங்கிக் கொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.