மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மூத்த ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேசியதாக, சவுக்கு சங்கர் மற்றும் Red pix யு டியூப் சேனல் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.