தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதன் (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் கடந்த 1996-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க பட்டார்.
நாகர்கோவில் அருகேயுள்ள கருப்புகோடு பகுதியிலுள்ள அவரது வீட்டை ஆதரவற்றோர் இல்லமாக மாற்றி அங்கு வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
வேலாயுதனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.