நெல்லிமலை வனப்பகுதிக்குள் நுழைய வழி தெரியாமல் நிற்கும் காட்டு யானைக்கு வழி அமைத்துக் கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சமயபுரம் கிராமத்தில் உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் வசித்து வரும் காட்டுயானை பாகுபலி, நெல்லி மலை வனத்திலிருந்து கல்லார் வனப்பகுதிக்கு இடம்பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் யானை இடம்பெயர உதவும் பாதையில் தற்போது விவசாயம் நடைபெறுவதால், போக வழியில்லாமல் பாகுபலி யானை திகைத்து நின்றது.
இதனால் பாகுபலி யானை பயணிக்க பாதையை சரிசெய்து கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்