நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல வனப்பகுதிகளில், வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பும், பின்பும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் காப்பகத்தின் கள இயக்குநர் உத்தரவின்படி வெளி மண்டல வனச்சரக பகுதியில் முதற்கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பில் 170 வனப்பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.