ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் கோபால் என்ற வாலிபர் உயிரிழந்தார்.
கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால், இவர், அனுசோனை ரயில்வே கேட் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்கு மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து அவரை துரத்தி தாக்கியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த கோபாலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.