விருதுநகர் மாவட்டம் சிவகாமிபுரம் அருகே வீட்டில் கண்ணாமூச்சி ஆடியபோது எதிர்பாராதவிதமாக துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த செல்வக்குமார பாண்டியன் என்பவரும், அவரது மனைவியும், அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு, காமேஷ் அருண்குமார், கமலேஷ் வருண்குமார் என 12 வயதில் இரட்டை மகன்கள் இருந்தனர். கோடைவிடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்த சிறுவர்கள் கண்ணாமூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தொட்டிலுக்காக போடப்பட்டிருந்த துணி கழுத்தில் சிக்கியதில், காமேஷ் அருண்குமார் உயிரிழந்தார்.