மயிலாடுதுறை அருகே இடி விழுந்த அதிர்ச்சியில், பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.
திருக்கடையூர் அடுத்த அபிஷேக கட்டளை பகுதியில், திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது.
வயலில் மேய்ந்து கொண்டிருந்த தனது மாட்டை கட்டுவதற்காக ராஜேந்திரனின் மனைவி உமா சென்றுள்ளார். அப்போது இடி தாக்கி சினை மாடு உயிரிழந்தது. அப்போது உமாவும் வயலிலேயே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.