நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள பனங்குடி சிபிசிஎல் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்ககோரி 8ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலையின் விரிவாக்கப் பணிக்காக பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து 620 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.