யூடியூபர் சவுக்கு சங்கரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் யுடியூப்பர் சவுக்கு சங்கர், அவரது கார் ஓட்டுநர் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கமுதி மகேந்திரன் ஆகியோரை கோவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை மத்திய சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர், மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, சவுக்கு சங்கரை வரும் 22 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் திரண்டு வந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.