கோவாவில் விபத்தில் சிக்கியவரை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கோவாவின் கோகோல் மார்கோவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், விபத்தில் காயமடைந்த நபருக்கு உதவினார். இதுதொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.