அடுத்த சில நாட்களில் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் திடீர் விடுப்பு காரணமாக 90-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் அடுத்த சில நாட்களில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.