மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பழுது ஆனதாக அரசியல் கட்சி முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இங்கு மத்திய பாதுகாப்பு படை மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், அரசியல் கட்சி முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது அடைந்ததால், அரசியல் கட்சி முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
அதன் பேரில், பழுதான 10 சிசிடிவி கேமராக்கள் சரி செய்யப்பட்டன.