சூரிய மின் உற்பத்தியில் இந்தியா நான்காம் இடம் வகிப்பதாக எம்பர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் மின் ஆற்றல் விவரங்கள் சேகரிப்பு அமைப்பான எம்பர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா அதிக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அபரிமிதமான சூரிய ஒளி மின்னாற்றலை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் உலகம் முழுவதும் சூரிய ஒளி மின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 18 டெராவாட் ஆக உள்ளது எனவும் இதனால் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா நான்காம் இடத்தில் உள்ளதாகவும் எம்பர் அமைப்பு தெரிவித்தது.