நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் பிரதான அணையாக மணிமுத்தாறு அணை விளங்குகிறது.
இந்த அணையிலிருந்து 2 ஆயிரத்து 756 ஏக்கர் அளவிலான பயிர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்காகவும், கார் பருவ சாகுபடிக்காகவும் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி 120 நாட்கள் பாசன வசதிக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.