அட்சய திருதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
இந்த மங்களகரமான நிகழ்வு உங்கள் அனைவரின் வாழ்வில் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் கொண்டு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொதுமக்கள் வாழ்வில் நித்திய ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக லட்சுமி தேவியை பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.