அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு - சிறப்பு தொகுப்பு!
Sep 27, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் நாடு கடந்த குற்றங்கள் தொடர்பான ‘கூட்டு செயல் திட்டத்துக்கு இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2023ம் ஆண்டு, கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்

ட்ரூடோவின் குற்றச்சாட்டை அபத்தமானது, ஆதாரமற்றது என்று நிராகரித்த இந்தியா, கனடாவுடனான தூதரக உறவை நிறுத்தி வைத்தது. கனடாவில் இருந்த தனது உயர் ஆணையரையும் ஐந்து தூதர்களையும் திரும்ப அழைத்துக் கொண்ட இந்தியா,இந்தியாவில் இருந்த கனடா தூதர்களையும் வெளியேற்றியது.

இந்தச் சூழலில் நடைபெற்ற கனடா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான மார்க் கார்னி இந்தியாவுடனான உறவைச் சீரமைக்க முயற்சி எடுத்தார்.

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்து மார்க் கார்னி பேச்சு வார்த்தை நடத்தினார்.அதனை தொடர்ந்து தங்கள் நாட்டு தலைநகரங்களில் தூதரக உயர் ஆணையர்களை இரு தலைவர்களும் நியமித்தனர்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும் மார்க் கார்னியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உயர் லட்சிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டன.

தொடர்ந்து கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியையும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

இதற்கிடையே, கனடா பிரதமரின் துணைச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகரான திருமதி நதாலி ட்ரூயின், இந்தியாவுக்கு வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.

இந்நிலையில்,கடந்த வாரம் கனடாவின் பிரான்ஸ் மற்றும் மொனாக்கோவுக்கான தூதராக நதாலி டிரூயின் நியமிக்கப்பட்டார். தனது தூதரகப் பணிக்காக பாரிஸ் புறப்படத் தயாராகி வரும் நிலையில், கனடாவில் அவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

இந்தச் சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் பிரச்சினைகள் குறித்த இருதரப்பு ஒத்துழைப்புக்கு வழிகாட்டவும், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் தொடர்பு அதிகாரிகளை நியமித்து நடைமுறை ஒத்துழைப்பை செயல்படுத்தவும் கூட்டுச் செயல் திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும் இருதரப்பு உளவுத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், சட்ட அமலாக்கத்தை நெறிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் போன்ற போதைப்பொருட்களின் சட்டவிரோதப் புழக்கம் மற்றும் நாடு கடந்த போதை பயங்கரவாத நெட்வொர்க் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க இந்த செயல் திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க, இணையப் பாதுகாப்பு கொள்கை மற்றும் இணையப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த தகவல் பகிர்வு தொடர்பான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்கும், மோசடி மற்றும் குடியேற்ற அமலாக்கம் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த விவாதங்களைத் தொடர்வதற்கும் இருநாடுகளும் உறுதி யளித்துள்ளன.

கூடுதலாக கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியையும் சந்தித்து பேசியுள்ள அஜித் தோவலின் இந்த கனடா பயணம் தேசப் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

Tags: strengthen bilateral security cooperation.Canadian Foreign Minister Anita AnandIndiaCanadaNational Security Advisor Ajit DovalMark Carney
Share
Tweet
SendShare
Previous Post

ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!

Next Post

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies