திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே குடும்பத் தகராறில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கம்புணரியை அடுத்த கொடுக்கம்பட்டியை சேர்ந்த ஜெயபாலுக்கும் அவரது மனைவி நிவேதாவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் நிவேதா கலிக்கநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சித்ராவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனைவியைத் தேடி சென்ற ஜெயபால், அரிவாளால் சித்ரா மற்றும் நிவேதாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நிவேதா பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.