சென்னை திருவொற்றியூர் அருகே நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற நித்தியானந்தம் உடல் கரை ஒதுங்கியது.
திருச்சுனாங் குப்பத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது, ராட்சத அலையில் சிக்கி காணாமல் போனார்.
இதனால், மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சுனாங் குப்பம் கடற்கரையோரம் ஒதுங்கிய அவரது உடலை மீட்ட போலீசார், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.