கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர் அடுத்த கெலமங்கலம் துளசி நகரில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன.
இங்கு சென்று திரும்பிய சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதால், உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் எனக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.