மதுரை அருகே மழை காரணமாக அறுந்து தொங்கிய மின்சார வயரை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
டிவிஎஸ் நகரை சேர்ந்த முருகேசன் – பாப்பாத்தி தம்பதி, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மின்வயர் அறுந்து தொங்கியுள்ளது.
இதனை கவனிக்காமல் சென்றதால், மின்சாரம் தாக்கி மகன் கண் முன்னே முருகேசனும், பாப்பாத்தியும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.