கும்பகோணம் அருகே பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நரசிங்கம்பேட்டை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் அட்சய திருதியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் திரவுபதி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
அப்போது, குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், புத்தகப்பை கொடுத்தும், மேளம், தாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.